ECONOMYNATIONAL

கோல குபு பாரு மக்களுக்கு 300 சுயப் பரிசோதனை கருவிகள் விநியோகம்

உலு சிலாங்கூர், செப் 25- கோல குபு பாரு தொகுதி மக்களுக்காக உமிழ்நீர் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கண்டறியக்கூடிய சுயப் பரிசோதனை கருவிகள் வழங்கப்படவுள்ளன.

நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த சயப் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று மற்றவர்களுக்கும் பரவாமலிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக முன்கூட்டியே சுயமாக  பரிசோதனை செய்து கொள்வதற்கு இந்த திட்டம் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

இந்த சுயப் பரிசோதனை கருவிகள் தேவைப்படும் பொதுமக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9.00 தொடங்கி மாலை 5.00 மணி வரை தொகுதி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்குள்ள ராசா, கம்போங் சுவாங் சமூக மண்டபத்தில் நடைபெற்ற கோல குபு பாரு தொகுதி நிலையிலான நடமாடும் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தைப் பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த நடமாடும் தடுப்பூசி இயக்கத்திற்கு பொதுமக்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்ததோடு சுமார் 350 பேர் தடுப்பூசி பெற்றுக் கொண்டனர்.


Pengarang :