ECONOMYMEDIA STATEMENTPBT

பூச்சோங் இந்தான் பிபிவி மீண்டும் திறக்கப்பட்டது,  நாளுக்கு 1,500 மாணவர்களை இலக்காகக் கொண்டது.

 ஷா ஆலம், அக்டோபர் 15: ஒரு நாளைக்கு 1,500 மாணவர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்ற இலக்குடன் இளம் பருவத்தினருக்கான தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டத்திற்காக (PICK) பூச்சோங் இந்தான் தடுப்பூசி மையம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

கின்ராரா சட்டமன்ற உறுப்பினரும்  சிவாங்கூர் மாநில  ஊராட்சி மன்றங்கள், பொது போக்குவரத்து, புதுக் கிராம மேம்பாடுகளுக்கு  பொறுப்பான  மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான  இங் ஸீ ஹான் சுபாங் ஜெயா நகர மன்றத்தின் (எம்பிஎஸ்ஜே)  ஒத்துழைப்புடன் பூச்சோங் இந்தான் பல்நோக்கு மண்டபத்தில்  பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக  கூறினார்.

பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி  இங்கு வழங்கப்படும் என்று கூறிய அவர்,  இந்த திட்டம் நவம்பர் 18 வரை ஆறு வாரங்கள் நீடிக்கும். நாளொன்றுக்கு சுமார் 1,000 முதல் 1,500 மாணவர்கள் ஊசி போடும் இலக்குடன் மொத்தம் 25 பள்ளிகள் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இளைஞர்களுக்கான PICK திட்டம், பெட்டாலிங் மாவட்ட சுகாதார அலுவலகம் (PKD), பெட்டாலிங் பெர்டானா மாவட்ட கல்வி இலாக்கா,சுபாங் ஜெயா மாநகர் மன்றம்  மற்றும் கின்ராரா சட்டமன்ற சேவை மையத்தின் கூட்டு முயற்சியாகும்.

“தற்போது, ​​மலேசியாவின் சுகாதார அமைச்சகம் (MOH) அந்தந்த பள்ளிகளால் நிர்வகிக்கப்படும் PPV யில் நியமனம் மூலம் மட்டுமே தடுப்பூசி எடுக்க அனுமதிக்கிறது” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் கூறினார். எவ்வாறாயினும்,  ஊராச்சி மன்றங்களுக்கான சிலாங்கூர்  அரசாங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக இருக்கும் அவர், பிபிவி கள் எதிர்காலத்தில் முன் பதிவு இல்லாமல் வருகையை அனுமதிப்பார் என்று நம்புகிறார்.

“வீட்டில் படிக்கும் அல்லது பள்ளியை விட்டு விலகிய இளைஞர்கள் உட்பட, தடுப்பூசி மிகவும் பரவலாக வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு இது உதவும்” என்று அவர் கூறினார்.அவரைப் பொறுத்தவரை,  பூச்சோங்கில் வசிப்பவர்களுக்கு, குறிப்பாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குடியிருப்பு பகுதிகளுக்கு வெளியே தடுப்பூசி மையங்களுக்கு அனுப்பாமல் அவர்கள் குடியிருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள இந்த பிபிவி உதவியாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார்..

 


Pengarang :