ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

“சித்தம்“ திட்டத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஷா ஆலம், அக் 16- சித்தம் எனப்படும் இந்திய தொழில் ஆர்வலர் மேம்பாட்டு மையத்தில் இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்  கூறினார்.

இந்த அமைப்பு மேற்கொண்டு வரும் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி, திறன் மற்றும் தயாரிப்பு பயிற்சி, க்ரோ எனப்படும் வர்த்தக வழிகாட்டித் திட்டம், கிரான் எனப்படும் வர்த்தக உபகரண நிதியுதவித் திட்டம் ஆகியவற்றின் வாயிலாக அவர்கள் பலன் பெற்றதாக அவர் சொன்னார்.

இத்திட்டங்களுக்கு இவ்வாண்டு மார்ச் மாதம் தொடங்கி இயங்கலை வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட வேளையில் இதுவரை சுமார் 700 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்திற்கான தேர்வு நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ளவிருக்கிறோம். இதன் வாயிலாக வேலை வாய்ப்புகளை நிரப்பவும் தனிப்பட்ட முறையில் அல்லது சித்தம் உறுப்பினர்களுக்கிடையே கூட்டு முறையில் வியாபாரம் செய்வதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நேற்று, மாநில அரசுத் தலைமைச் செயலகத்தில்  நடைபெற்ற சான்றிதழ் மற்றும் வர்த்த உபகரணங்களை வழங்கும் நிகழ்வுக்கு தலைமை  தாங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய தொழில்முனைவோர் தங்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக அவர்களுக்கு பயிற்சிகள்,வழிகாட்டி, மானியம் மற்றும் வர்த்தக உபகரணங்களை வழங்குவதை இலக்காகக் கொண்ட இந்த சித்தம் திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

 


Pengarang :