HEALTHMEDIA STATEMENTNATIONAL

91.4 விழுக்காட்டு பெரியவர்கள் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்

கோலாலம்பூர், அக் 16- நாட்டில் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்கள் எண்ணிக்கை நேற்று நள்ளிரவு வரை 91.4 விழுக்காடாக அதாவது 2 கோடியே 13 லட்சத்து 99 ஆயிரத்து 802 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை 91.2 விழுக்காடாக இருந்த தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது 0.2 விழுக்காடு அதிகமாகும்.

மேலும், 95.1 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 26 லட்சத்து 60 ஆயிரத்து 137 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் அகப்பக்கமான கோவிட்நாவ் கூறியது.

நேற்று நாடு முழுவதும் பெரியவர்கள் மற்றும் இளையோருக்கு 174,732 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 4 கோடியே 66  லட்சத்து 33 ஆயிரத்து 404  தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 20.2 விழுக்காட்டினர் அல்லது 637,079 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 77.5 விழுக்காட்டினர் அல்லது 24 லட்சத்து 39 ஆயிரத்து 727 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

 


Pengarang :