ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

156 இடங்களில் மாலை 6.30 மணி முதல் நீர் விநியோகம் தொடங்கும்

ஷா ஆலம், அக் 19- குழாய் உடைந்ததால் நீர் விநியோகம் பாதிக்கப்பட்ட சிப்பாங் வட்டாரத்தின் 145 பகுதிகள் மற்றும் கோலா லங்காட்டின் 11 பகுதிகளில் இன்று மாலை 6.30 மணி முதல் நீரை விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று 9.00 மணி வரை 55 விழுக்காட்டு பழுதுபார்ப்பு பணிகள் முற்றுப் பெற்றுள்ள வேளையில் மாலை 6.00 மணிவாக்கில் அப்பணிகள் முழுமையடையும் என்று ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

நாளை மாலை  6.00 மணிளவில் அனைத்து பகுதிகளிலும் நீர் விநியோகம் முழுமையாக சீரடையும். எனினும், குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள இடத்தின் தொலைவு மற்றும் நீர் அழுத்தத்தைப் பெறுத்து நீர் விநியோகம் கிடைக்கும் நேரம் மாறுபடும் என அது  தெரிவித்தது.

சிப்பாங், சாலாக் திங்கி கம்போங் சின்சாங் அருகே குழாய் உடைந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் நேற்று  அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பழுதுபார்ப்பு பணிகள் சீராக மேற்கொள்ளப்படுவதற்கு ஏதுவாக நீர் விநியோகம் நேற்று இரவு 9.00 அளவில் துண்டிக்கப்பட்டது.

இந்த நீர் விநியோகத் துண்டிப்பு காரணமாக சிப்பாங் வட்டாரத்தில் 145 இடங்களும் கோல லங்காட்டில் 11 இடங்களும் பாதிக்கப்பட்டன.


Pengarang :