ECONOMYHEADERADMEDIA STATEMENT

சிலாங்கூரின் விண்வெளித் துறை 2030 இல் விரிவாக்கம் காணும்- டத்தோ தெங் நம்பிக்கை

ஷா ஆலம், அக் 20- வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் சிலாங்கூர் மாநிலத்தில் விண்வெளித் துறை வளர்ச்சி காணும் முதலீடு, வாணிகம் மற்றும் தொழில்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

தற்போது போது மலேசியாவின் விண்வெளி சம்பந்தப்பட்ட 63 விழுக்காட்டுத் துறைகள் சிலாங்கூரில் செயல்படுவதாக கூறிய அவர், இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு காணும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.

வரும் 2030ஆம் ஆண்டுவாக்கில் சிலாங்கூர் முதலீட்டாளர்களின் பிரதான தேர்வாக அமையும் என எதிர்பார்க்கிறோம். இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முயற்சியில் சிலாங்கூர் மாநில வான்வெளி ஒருங்கிணைப்பு அலுவலகம் ஈடுபட்டு வருகிறது என்றார் அவர்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள சிலாங்கூர் வான் கண்காட்சி வான் போக்குவரத்து துறை சார்ந்தவர்கள் மத்தியில் ஒத்துழைப்பு ஏற்படுவதற்கு வழி வகுக்கும் என நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.

சிப்ஸ் எனப்படும் 2021 ஆம் ஆண்டு சிலாங்கூர் அனைத்துலக உச்சநிலை மாநாடு மற்று சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சி தொடர்பில் சிலாங்கூர் கினிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

மாநிலத்தில் முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி நவம்பர் மாதம் 25 முதல 27 வரை சுபாங் ஸ்கைபார்க்கில் நடைபெறும். முப்பது நிறுவனங்கள் பங்கேற்கம் இந்த கண்காட்சியில் 5,000 பேர் வரை பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


Pengarang :