ECONOMYMEDIA STATEMENTPBT

சிப்பாங், கோல லங்காட்டில் நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது

ஷா ஆலம், அக் 20- சிப்பாங் மற்றும் கோல லங்காட் பகுதிகளில் இன்று காலை நீர் விநியோகம் வழக்க நிலைக்கு திரும்பியது. சாலாக் திங்கி, கம்போங் சின்சாங்கில் ஏற்பட்ட குழாய் உடைப்பை சரி செய்யும் பணிகள்  நேற்று மாலை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து நீர் விநியோகம் சீரடையத் தொடங்கியது.

இந்த நீர் விநியோகத் தடையினால்  சிப்பாங்கில் 145 இடங்களும் கோல லங்காட்டில் 11 இடங்களும் பாதிக்கப்பட்டன.

நீர் விநியோகத் தடை ஏற்பட்ட காலத்தில் பொறுமை காத்ததோடு முழு ஒத்துழைப்பையும் வழங்கிய பயனீட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது.

நீர் விநியோகம் தொடர்பான ஆகக்கடைசி நிலவரங்களை போஸ்புக், டிவிட்டர், இண்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மற்றும்  www.airselangor.com அகப்பக்கம்  வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

 


Pengarang :