ECONOMYMEDIA STATEMENTPBT

பொது மக்களுக்கு 10,000 சுற்றுலா பற்றுச் சீட்டுகள்- விரைந்து பெற மந்திரி புசார் வேண்டுகோள்

ஷா ஆலம், அக் 23– சிலாங்கூரிலுள்ள 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு மாநில அரசு 10,000 சுற்றுலா பற்றுச் சீட்டுகளை ஏற்பாடு செய்துள்ளது. தலா 100 வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச் சீட்டுகளை வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் ஷோப்பி விற்பனை செயலி வாயிலாக பெறலாம்.

“சிலாங்கூரை முதலில் வலம் வருவோம்“ எனும் திட்டத்தின் கீழ் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 30 ஆம்  தேதி வரை பயன்படுத்தக்கூடிய 10,000 சுற்றுலா பற்றுச் சீட்டுகளை சிலாங்கூர் அரசு வழங்குவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த பற்றுச்சீட்டுகள் நேற்று தொடங்கி வழங்கப்படுகின்றன. மாநிலத்திலுள்ள 35 சுற்றுலா நிறுவனங்கள் வழங்கும் 170 சுற்றுலா திட்டங்களுக்கு இந்த பற்றுச் சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று அவர் சொன்னார்.

இந்த பற்றுச் சீட்டுகளை ஒரு பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்று அதனை  வேறு திட்டங்களுக்கு பயன்படுத்த முடியாது என்றும் டூரிசம் சிலாங்கூர் எனப்படும் மாநில சுற்றுலா ஊக்குவிப்பு நிறுவனம் கூறியது.

கித்தா சிலாங்கூர் 2.0 தொகுப்பில் வெளியிட்டப்பட்ட இந்த திட்டத்தை சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கடந்த 5 ஆம் தேதி தொடக்கி வைத்தார்.

இத்திட்டம் தொடர்பான மேல் விபரங்களைப் பெற selangor.travel.  என்ற அகப்பக்கத்தை வலம் வரலாம்.


Pengarang :