ECONOMYMEDIA STATEMENTSELANGOR

எஸ்.ஏ.பி. திட்டத்தின் கீழ் 120 தொழில் முனைவோர் உருவாக்கம்- டத்தோ தெங்

ஷா ஆலம், அக் 24- சிலாங்கூர் அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய எஸ்.ஏ,பி. எனப்படும் மாநில விரைவுத் திட்டத்தின் கீழ் 120 மின் வணிக தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

இந்த மூன்று மாத  காலத் திட்டத்தின் மூலம் பங்கேற்பாளர்களின் ஆற்றலை மேம்படுத்தவும் வர்த்தகம் தொடர்பான நெளிவு சுழிவுகளை அவர்கள் அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பினையும் ஏற்படுத்தவும் முடிந்ததாக வாணிக மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம்  கூறினார்.

மேலும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர் இலக்கவியல் திட்டத்திற்கு மாறும் அதே வேளையில் இத்திட்டத்திலும் பங்கேற்க ஊக்குவித்து வருகிறோம் என்று அவர் சொன்னார்.

இந்த எஸ்.ஏ.பி. திட்டம் சிடேக் எனப்படும் சிலாங்கூர் மாநில தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின் வணிக மன்றத்திற்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது. இதன் மூலம் கோவிட்19 பெருந்தொற்று காலத்திலும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோ வர்த்தகத்தில் தொடர்ந்து மேம்பாடு காண முடிந்தது என்றார் அவர்.

சுபாங் தொழில் பேட்டையில் யெல்லோ பாக்ஸ நிறுவனத்தின் உள்வடிவமைப்பு மற்றும் பளிங்குக் கல் கண்காட்சிக் கூடத்தை தொடக்கி  வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த எஸ்.ஏ.பி. திட்டத்தில் பங்கேற்ற தொழில் முனைவோர் கண்டு வரும் வெற்றியைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்தை  அடுத்தாண்டிலும் தொடர தாங்கள் திட்டமிட்டுள்ளதாக தெங் சொன்னார்.

 


Pengarang :