ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

நிலையான சுற்றுச்சூழல் நகர விருதை ஷா ஆலம் மாநகர் மன்றம் வென்றது

ஷா ஆலம், 28-  ஷா ஆலம் மாநகர் மன்றம், (எம்.பி.எஸ்..) இந்தோனேசியாவின்  நீடித்த சுற்றுச்சூழல்  நகரங்களுக்கான ஆசியான் பணிக்குழுவின் நிலையான சுற்றுச்சூழல்  நகரத்திற்கான விருதை வென்றுள்ளது.

 

இந்த 5 ஆவது ஆசியான் நீடித்த சுற்றுச்சூழல்  நகரங்களுக்கான அங்கீகாரம் அக்டோபர் 21 ஆம் தேதியன்று இணையம் வாயிலாக வழங்கப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவு அதிகாரி ஷாரின் அகமது கூறினார்.

 

நாட்டிலுள்ள இதர நகரங்களும் இந்த தேர்வில் இடம் பெற்றிருந்த நிலையில் சுத்தமான காற்று, நீர் மற்றும் நிலம் கொண்ட நகரமாக ஷா ஆலம் மாநகரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

 

நீடித்த சுற்றுச்சூழல் நகரம் என்ற முறையில் ஷா ஆலம் மாநகர் மன்றத்திற்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த விருது விளங்கும் அதே வேளையில் சுத்தமான, பசுமை நிறைந்த மற்றும் மக்கள் வசிக்கத்தக்க நகரமாக விளங்குவதை உறுதி செய்வதற்கான நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

 

வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சு மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த போட்டிக்கு மாநகர் மன்றம் விண்ணப்பத்தை அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :