ECONOMYMEDIA STATEMENTSELANGOR

பட்டதாரிகளுக்கு உதவும்  வகையில் வேலை வாய்ப்புகளும்  ஏற்பாடு  செய்ய வேண்டும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00மணிக்கு  சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி  மாநில சட்டசபையில் சமர்பிக்க விருக்கும்  2022 ம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டில்  இளைஞர்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்விக்கு , ஒரு பட்டதாரி  இளைஞரான  P. திருவரசு 27 வயது அளித்த பதில்கள்.

 மாநில அரசு  வேலைவாய்ப்பு சந்தைகளை  நடத்துகிறது., இதில் எங்களைப் போன்ற பட்டதாரிகளுக்கு உதவும்  வகையில் வேலை வாய்ப்புகளும்  ஏற்பாடு  செய்ய வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு  என்றார்.

சிலாங்கூர் ஒரு மேம்பட்ட மாநிலம் என்று  அரசு கூறிக் கொள்கிறது, அதற்கு ஏற்றார் போல் வேலை வாயப்புகள்  உயர் வருமானம் கொடுக்க கூடியதாக இருக்க வேண்டும் என  எதிர் பார்க்கிறோம்.

 அடுத்து  பட்டதாரிகள்  தொழில் ஆராய்ச்சிகளை செய்ய , அதற்கான R&D நிதி உதவிகளையும் அரசு ஏற்படுத்த வேண்டும் என்று  எதிர்பார்க்கிறோம்.

இது நாங்கள் கற்ற  கல்வி வழி உருவாக்கிய சில ஆராய்ச்சி , ஆய்வுகளை தொடர்ந்து மேம்படுத்த  உதவும். சில நேரங்களில்  எங்கள் கண்டு பிடிப்புகளுக்கு  தொடர்புள்ள  நிறுவனங்கள்  நாட்டில் இயங்கும் ஆனால்  அந்த நிறுவனங்களில்  பட்டதாரி மாணவர்களுக்கு  வாய்ப்பு  வழங்குவதில்லை.

இது போன்ற  போக்கினால்  கற்ற கல்வி,  எங்களுக்கும்  , நாட்டுக்கும் சரியாக பயனளிக்காமல் போகிறது.

ஆக மாநில  அரசும் பட்டதாரி மாணவர்களுக்கு  இது போன்ற வாய்ப்புகளை வழங்க முன்வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்  என்றார்.  


Pengarang :