ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

அம்பாங், உலு லங்காட், கோம்பாக்கில் வெள்ளம்- மீட்புப் பணிகளில் மாநில அரசு தீவிரம்

ஷா ஆலம், நவ 23-  அம்பாங், உலு லங்காட் மற்றும் கோம்பாக்கில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சிலாங்கூர் அரசு பல்வேறு துறைகளை முடுக்கி விட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடி உதவிகளை வழங்குவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் ஊராட்சி மன்றங்கள் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம், தொகுதி சட்டமன்ற சேவை மையங்கள் மற்றும் தொகுதி ஒருங்கிணைப்பாளர் அலுவலங்கள் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புறவு பணிகளை டீம் சிலாங்கூர் மற்றும் செர்வ் எனப்படும் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பு ஆகியவை மேற்கொண்டு வருகிறன்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் சொன்னார்.

மலேசிய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளபடி பருவமழை மற்றும் அடை மழை ஏற்படும் சாத்தியம் உள்ள நிலையில் மாநில அரசு கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று மூன்று மணி நேரத்திற்கு இடைவிடாமல் பெய்த மழையில் அந்த மூன்று மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.


Pengarang :