ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

காப்புறுதி இல்லாத வாகனங்களை அடையாளம் காண “ஓப்ஸ் செடார்” நடவடிக்கை

புத்ராஜெயா, நவ 24 - காப்புறுதி  இன்றி சாலையை பயன்படுத்தும் வாகனங்களைக் கண்டுபிடிப்பதற்காக சாலைப் போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.) இன்று தொடங்கி "ஓப்ஸ் செடார்" இயக்கத்தை  நாடு முழுவதும்  மேற்கொள்கிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் சாலைத் தடுப்புகள் மூலம் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சாலை போக்குவரத்து இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ ஜைலானி ஹஷிம் கூறினார்.

காப்புறுதி இன்றி சாலையைப் பயன்படுத்துபவர்களால் விபத்து ஏற்பட்டால் மற்ற வாகனமோட்டிகளுக்கும் அதனால் சிரமம் ஏற்படும். இதனைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

காப்பீடு இல்லாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ஆயிரம் வெள்ளிக்கும்  மிகாமல் அபராதம் விதிக்கப்படும் மற்றும் அவர்களின் ஓட்டுநர் உரிமம் 12 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த ஒப்ஸ் செடார் நடவடிக்கையின் போது  பொது மக்கள் சாலை வரி மற்றும் ஓட்டுநர் உரிமங்களை புதுப்பிப்பதற்கு ஏதுவாக  ஜே பி.ஜே. நடமாடும் முகப்பிட சேவையை வழங்கும் என்று ஜைலானி மேலும் கூறினார்.

Pengarang :