ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் வசம் வலுவான நிதிக் கையிருப்பு- வெ.20 கோடி பற்றாக்குறையினால் பாதிப்பில்லை

ஷா ஆலம், நவ 27- மாநில சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2020 வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட இருபது கோடி வெள்ளிக்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறை மாநில அரசுக்கு சுமையை ஏற்படுத்தாது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்தின் நிதிக் கையிருப்பு அதிகரிப்பைக் கண்டுள்ளதோடு வலுவுடனும் இருப்பதே இதற்கு காரணமாகும் என்று அவர் சொன்னார்.

வரவு செலவுத் திட்டத்தில் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமல்ல. நமது கையிருப்பு கூடுதலாகவும் வலுவாகவும் உள்ளது. நெருக்கடியான கட்டத்தில் அந்த கையிருப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேம்பாட்டுப் பணிகள் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்கு செலவிட வேண்டிய தருணம் இதுவாகும் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் நேற்று 2022 வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொது மக்கள், வர்த்தக சமூகம் மற்றும் பொருளாதாரம் பயனுறுவதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்ட 234 கோடி வெள்ளி வரவு செலவுத் திட்டத்தை மந்திரி புசார் நேற்று தாக்கல் செய்தார்.

அடுத்தாண்டில் மாநிலத்தின் வருமானம் 210 கோடி வெள்ளியாக இருக்கும் வேளையில் செலவு 232 கோடியே 30 லட்சம் வெள்ளியைப் பதிவு செய்யும் என மதிப்பிடப்படுகிறது. இதனால் 22 கோடியே 27 லட்சம் வெள்ளி பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளது.


Pengarang :