ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது 84 கோவிட்-19 சமபவங்கள் பதிவு

கோலாலம்பூர், டிச 1– கடந்த அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் வழி 84 கோவிட்-19  சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மக்களவைக் கூட்டத்திற்கு முந்தைய முன்னேற்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த அக்டோபர் 22 முதல் 25 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட கோவிட்-19 பரிசோதனையில் 18 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்று அவர் சொன்னார்.

நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு நோய்த் தொற்றியில் மற்றும் தொற்று மையத்துடன் தொடர்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது என்றார் அவர்.

மேலும், அக்டோபர் 27 முதல் நவம்பர் 28 வரை 41 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 25 புதிய சம்பவங்கள் பதிவாகின என்று அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :