HEALTHMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

சைபர் ஜெயா ஸ்ரீ புத்ரி பள்ளியை மூட உத்தரவு

கோலாலம்பூர், டிச  4 – புதிதாக 135 பேருக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பரவியதைத் தொடர்ந்து சைபர் ஜெயாவில் உள்ள ஸ்ரீ புத்ரி பள்ளியை  தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.

1988 ஆம் ஆண்டு தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டத்தின் (சட்டம் 342)  18 ஆம் பிரிவின் கீழ் துப்பரவு மற்றும் கிருமிநாசினி தெளிப்பு பணிக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார். சைபர் ஜெயா, ஸ்ரீ புத்ரி பள்ளியை உள்ளடக்கிய கோவிட்-19 தொற்று மையத்திற்கு பெர்சியாரான் தாசிக் தொற்று மையம் என்று பெயரிடப்பட்டது என்று அவர் நேற்று வெளியிட்ட கோவிட்-19  தொடர்பான அறிக்கையில் கூறினார்.

நேற்று வரை பள்ளியைச் சேர்ந்த 973 பேர் பரிசோதிக்கப்பட்ட வேளையில் 135 புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டன. 114 மாணவர்கள், 19 ஆசிரியர்கள் மற்றும் 10 பள்ளி ஊழியர்கள் அடங்கியோருடன் சேர்த்து நோய் கண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 143 பேராக உயர்ந்துள்ளது என்றார் அவர்.

இரண்டு ஆசிரியர்கள் மற்றும் 71 மாணவர்கள் சம்பந்தப்பட்ட 73 புதிய கோவிட் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர்  கைரி ஜமாலுடின் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். இவ்விவகாரம் தொடர்பில் பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர்  சங்கத்துடன் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

தொற்று மையம் கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்ய  கண்காணிப்பு பணிகள் தொடரும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். கோவிட்-19  நோய்த் தொற்றுக்கு ஆளான 143  பேரில் 106 பேர் ஒன்றாம் கட்ட பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.  35 பேர் 2ஏ கட்ட பாதிப்பையும் மேலும் இரண்டு பேர்  2பி கட்ட பாதிப்பையும் எதிர்நோக்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் சீரான உடல் ந நிலையில் உள்ளனர் என்று அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களுமஒரு ஆசிரியரும் மேல் சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக  மேப்ஸ் மையத்தில அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :