ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வானமோட்டும் லைசென்ஸ் விற்பனையா? ஜே.பி.ஜே. விசாரணை

 புத்ராஜெயா, டிச 4- “லேசேன் தெர்பாங்” எனப்படும் வாகனமோட்டும் லைசென்ஸ் விற்பனை குறித்து சமூக ஊடகங்களில் செல்வாக்கு பெற்றவரான அஸ்ருள் அப்பாண்டி சோப்ரி என்பவர் வெளியிட்ட பதிவு தொடர்பில் சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.)ஊழல் தடுப்பு ஆணையத்துடன் இணைந்து துரித விசாரணையை மேற்கொள்ளும்.

இப்புகாரை தமது தரப்பு மிகக் கடுமையாக கருதுவதோடு விசாரணைக்கு உதவுவதற்காக சம்பந்தப்பட்ட நபரை தமது தரப்பு அழைக்கும் என்று ஜே பி.ஜே. அறிக்கை ஒன்றில் கூறியது. ஜே பி.ஜே. சம்பந்தப்பட்ட எந்தவொரு முறைகேடான விவகாரத்திலும் விட்டுக்கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்று அது திட்டவட்டமாக கூறியது.

ஊழல் தடுப்பு ஆணையம் தொடர்ச்சியாக பல விசாரணைகளை நடத்தி வருகிறது. உதாரணததிற்கு 2018 இல் நடத்தப்பட்ட விசாரணையைக் கூறலாம் என்று அத்துறை கூறியது. வாகனமோட்டும் லைசென்ஸ்களை சட்டவிரோதமாக விற்கும் நடவடிக்கையில் ஜே.பி.ஜே. அதிகாரிகள் நேரடியாக ஈடுபட்டு வருவதாக அஸ்ருள் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

வானமோட்டும் பள்ளிகள் நடத்தும் தேர்வுகளில் தோல்வியடைந்தாலும் கையூட்டு வாங்கிக் கொண்டு அவர்களை வெற்றியடையச் செய்வதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.


Pengarang :