ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மூன்று மாநிலங்களில் வெள்ள நிலை சீரடைகிறது- சிலாங்கூரில் மாற்றமிலை

கோலாலம்பூர், ஜன 6- மூன்று மாநிலங்களில் வெள்ள நிலைமை சீரடைந்து வருவதைத் தொடர்ந்து அங்கு துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

எனினும், ஜொகூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் நேற்றிரவைக் காட்டிலும் இன்று காலை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.

நெகிரி செம்பிலானில் உள்ள ஐந்து துயர் துடைப்பு மையங்களில் 124 குடும்பங்களைச் சேர்ந்த 506 பேர் துயர் துடைப்பு மையங்களில் இன்னும் தங்கியுள்ளதாக சமூக நலத்துறையின் இன்போர்பெஞ்சானா அகப்பக்கம் கூறியது.

மலாக்காவில் நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி 128 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்த நிலையில் இன்று காலை 8.00 மணியளவில் 126 குடும்பங்களைச் சேர்ந்த 466 மட்டுமே அங்கு உள்ளனர்.

பகாங்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் செயல்படும் 30 துயர் துடைப்பு மையங்களில் 1,369 பேர் இன்று காலை வரை தங்கியிருந்ததாக மாநில பேரிடர் நிர்வாக செயலகம் கூறியது. நேற்றிரவு இந்த எண்ணிக்கை 1,491 ஆக இருந்தது.

சிலாங்கூரில் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 40 ஆக உள்ளதாக சமூக நலத் துறையின் இன்போ பெஞ்சானா அகப்பக்கம் தெரிவித்தது.

கம்போங் கிளானாங் சமூக மண்டபத்தில் 25 பேரும் கம்போங் பந்திங் சமூக மண்டபத்தில் 15 பேரும் இன்னும் தஞ்சம் புகுந்துள்ளனர்.

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்தவர்கள் எண்ணிக்கை இன்று காலை 8.00 மணியளவில் 4,449 ஆகப் பதிவானது. நேற்று இரவு நிலவரப்படி 66 துயர் துடைப்பு மையங்களில் 4,353 பேர் தங்கியிருந்தனர்.


Pengarang :