ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி முழுமையடைந்த து

ஷா ஆலம், ஜன 8- வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எட்டு ஊராட்சி மன்றப் பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி நேற்றிரவுடன் 100 விழுக்காடு பூர்த்தியடைந்தது.

கடந்த மாதம் 20 ஆம் தேதி முதல் நேற்று வரை 48,589.95 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாக மாநிலத்தில் குப்பைகளை அகற்றும் பணிக்கு பொறுப்பேற்றுள்ள கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கூறியது.

இப்பணி முழுமை பெறுவதில் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவிகளை நல்கிய தரப்பினருக்கும் அணுக்கமான ஒத்துழைப்பை தந்த மாநில அரசுக்கும் தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்நிறுவனம் டிவிட்டர் பதிவின் வழி தெரிவித்தது.

ஷா ஆல மாநகர் மன்றப் பகுதியில் மிக அதிகமாக அதாவது 20,577 டன் குப்பைகள் அகற்றப்பட்டதாவும் அது குறிப்பிட்டது.

அதற்கு அடுத்த நிலையில் சுபாங் ஜெயா பகுதியில் 8,989 டன் குப்பைகளும் கிள்ளான் பகுதியில் 7,933 டன் குப்பைகளும் காஜாங் பகுதியில் 5,820 டன் குப்பைகளும் அகற்றப்பட்டன.


Pengarang :