ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONAL

தற்காலிக மையங்களிலிருந்து குப்பைகளை இடம் மாற்றும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும்

செராஸ், ஜன, 10- வெள்ளத்தில் குவிந்த குப்பைகளை தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்களிலிருந்து கோல சிலாங்கூர், ஜெரம் பிரதான குப்பை கிடங்கிற்கு இடம் மாற்றும் பணி அடுத்த வாரம் முற்றுப் பெறும் என எதிர் பார்க்கப்டுகிறது.

ஷா ஆலம் செக்சன் 21 மற்றும் புக்கிட் பூச்சோங்கில் உள்ள தற்காலிக மையங்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வரும் வேளையில் எஞ்சியவை மூடப்பட்டு விட்டதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்களில் உள்ள அனைத்து குப்பைகளையும் ஒரு வார காலத்தில் அகற்றிவிட முடியும் என நம்புகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள கம்போங் பாரு பாத்தி 11இல் "பாய்க்" திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து குப்பைகளை விரைவாக அப்புறப்படுத்தும் நோக்கில் நான்கு ஊராட்சி மன்றப் பகுதிகளில் தற்காலிக குப்பை சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டதாக இங் கடந்த மாதம் கூறியிருந்தார்.

Pengarang :