ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKAN

மாணவர்களின் நேரடி பங்கேற்புடன் யுனிசெல் பட்டமளிப்பு விழா- பிப்ரவரி 5 ஆம்  தேதி நடைபெறும்

பெஸ்தாரி ஜெயா, ஜன 14- யுனிசெல் எனப்படும் சிலாங்கூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஈராண்டுகளுக்குப் பிறகு மாணவர்களின் நேரடி பங்கேற்புடன் நடைபெறுகிறது.

அடுத்த மாதம் 5 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் 15வது பட்டமளிப்பு விழாவில் 2,838 மாணவர்கள் கலந்து கொள்வர் என்று பல்கலைக்கழகத்தின் தலைவரும் உதவி வேந்தருமான பேராசிரியர் டத்தோ முகமது ரெட்சுவான் ஓத்மான் கூறினார்.

இந்த பட்டமளிப்பு விழா ஐந்து பிரிவுகளாக நடத்தப்படும் என்றும் இந்நிகழ்வில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான செயலாக்க நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் இணை வேந்தருக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தின் பெஸ்தாரி ஜெயா வளாகத்தி நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார்.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த 100 உயர்கல்விக் கூடங்கள் பட்டியலில் யுனிசெல் இணைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக முகமது ரெட்சுவான் கூறினார்.

கடந்த 2020இல் யு1 கிரீன்மெட்ரிக் பல்கலைக்கழக தர வரிசையில் யுனிசெல் பல்கலைக்கழகமும் கலந்து கொண்டதாக கூறிய அவர், 912 உயர்கல்விக் கூடங்கள் பங்கேற்ற இந்த தர வரிசைப் பட்டியலில் யுனிசெல்லுக்கு  486 ஆவது இடம் கிடைத்ததாக தெரிவித்தார்.

கடந்தாண்டு 912 உயர்கல்விக் கூடங்களில் 424 வது இடம் யுனிசெல் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்தது என்றார் அவர்


Pengarang :