ALAM SEKITAR & CUACAECONOMYHEALTHNATIONALSELANGOR

தடுப்பூசி பெற்றவர்கள் எண்ணிக்கை 2.29 கோடி பேராக உயர்வு

கோலாலம்பூர், ஜன 18– நாட்டில் நேற்றுவரை 237,703 பெரியவர்கள் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.  இதன் வழி ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 9 ஆயிரத்து 454 பேராக அதாவது 41 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இதுதவிர, நாட்டிலுள்ள பெரியவர்களில் 2 கோடியே 29 லட்சத்து 6 ஆயிரத்து 72 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 2 கோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 749 பேருக்கு அல்லது 99 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இதனிடையே 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 88.2 விழுக்காட்டினர் அல்லது 27 லட்சத்து 75 ஆயிரத்து 59 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும்  28 லட்சத்து 62 ஆயிரத்து 198 பேர் அல்லது 91 விழுக்காட்டினர் குறைந்த து ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளதாக அது கூறியது.

நாட்டில் நேற்று 242,705 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதை தரவுகள் காட்டுகின்றன. அதில் 1,912 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசியும் 3,090 பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 11 லட்சத்து 35 ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, நாட்டில் நேற்று கோவிட்-19 தொடர்புடைய 16 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதாக கிட்ஹப் கேகேஎம். அகப்பக்கம் கூறியது.


Pengarang :