ECONOMYHEALTHNATIONAL

ஜன.14 முதல் 186 ஒமிக்ரோன் வகை தொற்றுகள் கண்டுபிடிப்பு- நோர் ஹிஷாம் தகவல்

கோலாலம்பூர், ஜன 19- இம்மாதம் 14 ஆம் தேதி முதல் இதுவரை 186 ஒமிக்ரோன் வகை கோவிட்-19 நோய்த் தொற்று சம்பவங்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின ஒருங்கிணைந்த மருந்தியல் நிறுவனம் 46 சம்பவங்களையும் வெப்ப மண்டல தொற்று நோய் மற்றும் ஆராய்ச்சி மையம் 43 சம்பவங்களையும் மலேசிய ஜினோம் மற்றும் தடுப்பூசி நிறுவனம் 43 சம்பவங்ங்களையும் ஐ.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி மையம் 28 சம்பவங்களையும் சரவா பல்கலைக்கழக சுகாதார மற்றும் சமூக மருத்துவ கழகம் 26 சம்பவங்களையும் அடையாளம் கண்டுள்ளன என்று அவர் சொன்னார்.

இதனிடையே, நேற்று முன்தினம் நாட்டில் கோவிட்-19 எண்ணிக்கை 2,342 ஆக இருந்த நிலையில் நேற்று அந்த எண்ணிக்கை 3,245 ஆக உயர்வு கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இதன் வழி நாட்டில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்து 934 ஆக உயர்வு கண்டுள்ளது என்றார் அவர்.

புதிய தொற்றுகளில் 98.8 விழுக்காடு அல்லது 3,206 சம்பவங்கள் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பையும் 39 சம்பவங்கள் அல்லது 1.2 விழுக்காடு மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பையும் கொண்டிருந்ததாக அவர் மேலும் சொன்னார்.

நேற்று 3,093 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து கோவிட்-19 நோயிலிருந்து முற்றாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 41 ஆயிரத்து 355 ஆக உயர்ந்துள்ளது.


Pengarang :