ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பல லட்சம் பக்தர்களை ஈர்க்கும் பத்துலை தைப்பூசம்

ஷா ஆலம், ஜன 19- சுண்ணாம்புக் கல் மலையில் வீற்றிருக்கும் பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது.

ஒவ்வோராண்டின் தொடக்கத்திலும் இந்த குகைக்கோயிலில் கொண்டாடப்படும் தைப்பூச விழா தென் கிழக்காசியாவின் மிகபெரிய இந்து சமய விழா என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் ஆண்டுதோறும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களை ஈர்த்து வந்த இந்த ஆலயத்தின் மகிமைகளையும் சிறப்புகளையும் பட்டியலிடுகிறார் செய்தியாளர் ஃபாரிட்ஸ்வான் அப்துல் காஃபார்.

– கடல் மட்டத்திலிருந்து 326 மீட்டர் உயரத்தில் இந்த குகைக்கோயில் வீற்றிருக்கிறது                – கோலாலம்பூரிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இது அமைந்துள்ளது                                    – இந்த வளாகத்தின் பரப்பளவு 1.56 கிலோ மீட்டராகும்                                                                               – சுங்கை பத்துவின் பெயர் இவ்விடத்திற்கு சூட்டப்பட்டது

இங்கு மொத்தம் 20 குகைகள் உள்ளன.

அவற்றில் பிரசித்தி பெற்றவை-

– குகைக் கோயில்

– இருள் குகை

– விலா குகை

– இராமாயணக் குகை

இந்த ஆலயத்திற்கு செல்லும் 272 படிக்கட்டுகள் அழகிய வர்ணங்களால் மெருகேற்றப்பட்டுள்ளன

இக்குகைப் பகுதியில் 269 தாவர வகைகள் உள்ளன.

வில்லியம் டெம்ப்பள் ஹொர்னடே என்பவர் 1878 இல் இந்த குகையை கண்டு பிடித்தார்

வணிகப் பெருமகனார் கே. தம்புசாமி பிள்ளை இதனை வழிபாட்டுத் தலமாக மாற்றினார்

1891 ஆம் ஆண்டில் குகையில் முதன் முறையாக ஆலயம் நிறுவப்பட்டது.

1892 முதல் இங்கு தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

2006 ஆம் ஆண்டில் 42.7 மீட்டர் உயரம் கொண்ட முருகன் சிலை அமைக்கப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன்னர் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தைப்பூசத்தின் போது இங்கு ஒன்று கூடுவர்.

ஆலய வழிபாடுகள்

– முடி காணிக்கை

– காவடி எடுத்தல்

– புனித ஸ்நானம்

– பால் குட ஊர்வலம்

– இரத ஊர்வலம்

 


Pengarang :