ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

சிலாங்கூரில் ஏற்பட்ட வெள்ளம் வழக்கத்திற்கு மாறானது, மாநில அரசின் பேரிடர் நிர்வாகத்தின் சக்திக்கு அப்பாற்பட்டது- பிரதமர் ஒப்புதல்

ஷா ஆலம், ஜன 20- சிலாங்கூரில் கடந்த மாதம் பெய்த அடைமழை மாநில பேரிடர் நிர்வாகத்தின் எதிர்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்டு மிகவும் கடுமையானதாக இருந்ததை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் ஒப்புக் கொண்டார்.

வெள்ள அபாயம் குறித்த அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட போதிலும் அந்த வெள்ளப் பேரிடர் முற்றிலும் எதிர்பார்க்கப்படாத ஒன்று என்று அவர் சொன்னார்.

கடுமையாக மழை பெய்யும் சமயங்களில் திடீர் வெள்ளத்தை எதிர்கொள்வது ஷா ஆலம், தாமான ஸ்ரீ மூடா மக்களுக்கு வழக்கமான ஒன்றாக இருந்த போதிலும் வெள்ளம் இவ்வளவு விரைவாகவும் உயரத்திற்கும் ஏறும் என்று அவர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்று அவர் சொன்னார்.

இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் வெள்ளம் பேரிடர் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :