ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

அரசு ஊழியர்கள் ஊழலில் இருந்து விலகியிருப்பர்- சிலாங்கூர் சுல்தான் நம்பிக்கை

ஷா ஆலம், ஜன 21- அரசு ஊழியர்கள் குறிப்பாக சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை ஆற்றுவதில் உயர்நெறியையும் உயர்ந்தபட்ச நேர்மையையும் கொண்டிருப்பர் எனத் தாம் நம்புவதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் நேர்மையுடன் செயலாற்றுவதோடு ஊழல் நடவடிக்கைளிலிருந்து விலகியும் மக்கள் பிரச்சனைகளைக் களைவதில் அக்கறையும் கொண்டிருப்பர் என நான் நம்புகிறோன் என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா கூறினார்.

டான்ஸ்ரீ அம்ரின் புவாங் எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார். இந்நிகழ்வில் சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமீர் ஷா ஷராபுடின் இட்ரிஸ் ஷாவும் கலந்து கொண்டார்.

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, முன்னாள் நிர்வாக மற்றும் அரச தந்திர அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹலிம்  அலி ஆகியோரும் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்தனர்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுல்தான், நாட்டின் தேசிய கணக்காய்வுத் துறைத் தலைவராக நீண்ட காலம் அதாவது 11 ஆண்டுகள் மிகவும் சிறப்பான முறையில் அம்ரின் பணியாற்றியதாக குறிப்பிட்டார்.

சிலாங்கூர் மாநிலத்தில் அர்ப்பண உணர்வுடன்  ஆற்றிய சேவைக்காக அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சுல்தான் மேலும் கூறினார்.


Pengarang :