ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

சிஜங்காங் தொகுதியில் வெள்ள நிவாரண நிதி வழங்கும் பணி இம்மாத இறுதியில் முற்றுப் பெறும்

ஷா ஆலம், ஜன 21- சிஜங்காங் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,000 வெள்ளி நிதி வழங்கும் நிகழ்வு இம்மாத இறுதியில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை சுமார் 500 பேர் மாநில அரசு மற்றும் மத்திய அரசுகளின் வெள்ள நிவாரண உதவி நிதியைப் பெற்றுள்ளதாக தொகுதி நிர்வாகி ஹைருள் நிஸாம் தோஹார் கூறினார்.

வெள்ள நிவாரண நிதிக்கு இதுவரை 3,000 த்திற்கும் அதிகமான விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம். அவர்களில் பெரும்பாலோர் உதவி பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கான உதவித் தொகை விரைவில் வழங்கப்படும் என்றார் அவர்.

வெள்ளம் காரணமாக பலர் உடைமைகளையும் வீட்டிலுள்ள பொருள்களையும் இழந்துள்ளனர். அப்பொருள்களை புதிதாக வாங்குவதற்கு ஏதுவாக இந்த நிவாரண நிதியை விரைந்து வழங்க விரும்புகிறோம். இது தவிர, சீனப் புத்தாண்டு மற்றும் பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கும்  இந்த நிதி பயன்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

கடந்த மாதம் 18 ஆம் தேதி மாநிலத்தின் பல மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தை மாநில அரசு கடந்த மாதம் 21 ஆம் தேதி தொடக்கியது.

பத்து கோடி வெள்ளி நிதியில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10,000 வெள்ளியும் பொருள் இழப்புக்கு ஆளானவர்கள் குடும்பங்களுக்கு தலா 1,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.


Pengarang :