ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

வடிகால்களில் துப்புரவுப் பணி ஆண்டுக்கு நான்கு முறை மேற்கொள்ளப்பட வேண்டும் – பெர்மாத்தாங் உறுப்பினர் கோரிக்கை

ஷா ஆலம், மார்ச் 17- வடிகால்களில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அப்புறப்படுத்தும் பணி ஆண்டுக்கு மூன்று முறை அல்லாமல் நான்கு முறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் மூலம் மழை காலங்களில் நீர் பெருக்கெடுப்பதை தவிர்க்க முடியும் என்று பெர்மாத்தாங் தொகுதி உறுப்பினர் ரோஸானா ஜைனால் அபிடின் கூறினார்.

தற்போது பருவ நிலை நிலையற்றதாக உள்ளதோடு அடிக்கடி மழையும் பெய்வதால் தனது இந்த பரிந்துரை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கால்வாய்களில் உள்ள புற்கள் வேகமாக வளர்ந்து நீரோட்டத்திற்கு தடையை ஏற்படுத்துவதால் மழை காலங்களில் நீர் பெருக்கெடுக்கிறது.
இதனால் மக்கள் அச்சம் கொள்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று மேன்மை தங்கி சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் அவர் இவ்வாறு சொன்னார்.


Pengarang :