ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

இந்த வார இறுதியில் நான்கு இடங்களில் மலிவான கோழி, இறைச்சி, மீன் விற்பனை

ஷா ஆலம், மார்ச் 18: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பிகேபிஎஸ்) இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நான்கு இடங்களில் மலிவு விற்பனைத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.

சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பூச்சோங் கம்போங் அமான் 1 அடுக்குமாடி குடியிருப்புகள், ஸ்ரீ கெம்பாங்கன் மற்றும் SP3 சௌஜனா பூச்சோங் ஆகிய இடங்களில்  மாநில அரசின் பரிவுமிக்க வணிக  திட்ட விற்பனை நடைபெறவுள்ளதாக பிகேபிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

புக்கிட் பெருந்தோங் தாமான் புங்கா ராயா எம்கே லேண்ட் அலுவலகம் முன் புறம் மற்றும் பாத்தாங் காலி பண்டார் உத்தாமா பெட்ரோனாஸுக்கு அடுத்துள்ள தளத்தில் முன் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரை விற்பனை நடப்பதாக டாக்டர் முகமது கைரில் முகமது ராஸி விளக்கினார்.

“இந்த வார இறுதியில் விற்பனைத் திட்டத்தின் மூலம் RM71,800 விற்பனையை இலக்காகக் கொண்டுள்ளோம். நிகழ்ச்சி இன்னும் தொடங்கவில்லை என்றாலும் ஒவ்வொரு வாரமும் பலர் கலந்துகொண்டு சீக்கிரமாக வரிசையில் நிற்கிறார்கள். எனவே, இலக்கை அடைய முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

“ஸ்ரீ கெம்பாங்கன், பூச்சோங் மற்றும் உலு சிலாங்கூரைச் சுற்றியுள்ள குடியிருப்பாளர்களையும் இந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து நிகழ்ச்சியை சிறப்பிக்க நாங்கள் வரவேற்கிறோம்,” என்று சிலாங்கூர்கினி தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

அடுத்து, ரமலான் மாதத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் வகைகளை அதிகரிக்க பிகேபிஎஸ் திட்டமிட்டுள்ளதா என்பது குறித்து கேள்விக்கு கருத்து தெரிவித்த டாக்டர் முகமது கைரில், இந்த விஷயத்தை முதலில் கவனிக்க வேண்டும் என்றார்.

“இப்போதைக்கு, நாங்கள் இந்த திட்டத்தை ரமலான் காலத்தில் தொடர்வோம் அல்லது விவசாய ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஸாம் ஹஷிம் பரிந்துரைப் படி தேவைக்கு ஏற்ப சில மாற்றங்களுடன் தொடருவோம்,” என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தின் போது மொத்தம் 10,000 கோழிகள், 3,100 கிலோ புதிய மாட்டு இறைச்சி, 6,200 கிலோ கானாங்கெளுத்தி மற்றும் செலாயாங் மீன்கள் மற்றும் 315,000 தர பி முட்டைகள் விற்பனைக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளன.


Pengarang :