ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPENDIDIKANSELANGOR

தடுப்பூசி முயற்சியை சுல்தான் பாராட்டினார்

ஷா ஆலம் – மாட்சிமை தங்கிய (DYMM) சிலாங்கூர் சுல்தான் இரண்டு டோஸ் தடுப்பூசியை எடுத்துக்கொண்டு 90 விழுக்காட்டை எட்டிய மாநில மக்களுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தை (பிக்) செயல் படுத்தியதாலும், சிலாங்கூர் தொழில்துறை தடுப்பூசி (செல்வேக்ஸ்) திட்டம், செல்வேக்ஸ் சமூகம், செல்வேக்ஸ் மொபைல், செல்வாக்ஸ் யூத் மற்றும் செல்வாக்ஸ் பூஸ்டர் மூலம் மாநில அரசின் முயற்சிகளாலும் இந்த சாதனை உந்தப்பட்டதாக சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

“நாடு தற்போது எண்டமிக் நிலைக்குச் செல்லத் தயாராகிவிட்டாலும், நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) தொடர்ந்து கடை பிடிக்குமாறு எனது மக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்.

“மற்ற தொற்று அல்லாத நோய்களைத் தடுக்கும் முயற்சியாக ஆரோக்கியமான வாழ்க்கை முறை நடவடிக்கைகளைத் தொடர்ந்து கடை பிடிக்குமாறு அனைத்து மக்களுக்கும் நினைவூட்ட விரும்புகிறேன்” என்று மார்ச் 14 அன்று கூறினார்.

சிலாங்கூர் மாநில சட்டசபையின் தொடக்க விழாவில் பேசிய சுல்தான் ஷராபுதீன், மாநில அரசு செயல் படுத்தும் சுகாதார பரிசோதனைத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

“ஆபத்தான நோய்களை முன்கூட்டியே கண்டறிவதில் இந்த திட்டம் முக்கியமானது. விரைவான சிகிச்சை மற்றும் குணப்படுத்தும் முயற்சிகளை உறுதிப்படுத்துகிறது,” என்று கூறினார்.

இலவச சுகாதார பரிசோதனை திட்டம் இந்த மாதம் தொடங்கி 56 மாநில சட்டமன்றங்களிலும் செயல்படுத்தப் படும் என்று பொது சுகாதார ஆட்சிக்குழு டாக்டர் சித்தி மரியா மாமூட் தெரிவித்தார்.

இலவசத் திட்டமானது முன்கூட்டியே மக்களிடையே நோய் தொற்றை கண்டறிய உதவுகிறது.


Pengarang :