ECONOMYSELANGOR

கடுமையான நெறிமுறைகளுடன் கெஅடிலான் தேர்தல்- விதிகளை முறையாக கடைபிடிக்க அன்வார் வலியுறுத்து

ஷா ஆலம், ஏப் 7– கெஅடிலான் கட்சியின் 2022 ஆம் ஆண்டு தேர்தல் கடுமையான நெறிமுறைகளுடன் நடத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

இத்தேர்தலில் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்கும்படி அனைத்து வேட்பாளர்களையும் கட்சித் தலைவருமான அவர் கேட்டுக் கொண்டார்.

கட்சித் தேர்தலை ஏன் அவ்வளவு விரைவாக நடத்த வேண்டும் என சிலர் கேட்கின்றனர். தேர்தலை தற்போது நடத்துவது பொருத்தமானது மற்றும் சரியானது அல்ல என்று மேலும் சிலர் கூறுகின்றனர்.

இம்முறை குறிப்பாக ரமலான் மாதத்தில் கடுமையான நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் என்பதை அனைத்து வேட்பாளர்களுக்கும் உணர்த்துவதற்காக இதனைச் செய்கிறோம் என்றார் அவர்.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கெஅடிலான் கட்சியின் அனைத்து 222 தொகுதிகளுக்குமான வேட்புமனுத்தாக்கல் வரும் வெள்ளிக் கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ள வேளையில் எம்.பி.பி. எனப்படும் தலைமைத்துவ மன்றத்திற்கான வேட்புமனுத்தாக்கல் வரும் திங்கள் கிழமை நடைபெறும்.

தொகுதி மற்றும் கட்சியின் உயர்மட்டப் பதவிகளை உள்ளடக்கிய எம்.பி.பி.க்கான வேட்பு மனுத்தாக்கல் அனைத்தும் “அடில்“ எனும் செயலி வாயிலாக மேற்கொள்ளப்படும்.


Pengarang :