ECONOMYNATIONALTOURISM

விமானக் கட்டணங்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல் குறைப்பு- போக்குவரத்து அமைச்சு தகவல்

கோலாலம்பூர், ஏப் 18- பெருநாள் காலத்தின் போது விமானக் கட்டணங்களைக் குறைப்பதில் ஒத்துழைப்பு நல்குவதாக மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து  விமானக் கட்டணங்கள் 30 விழுக்காட்டிற்கும் மேல் குறைக்கப்பட்டுள்ளன.

எனினும், கட்டணக் குறைப்பு தொடர்பான விரிவான விபரங்கள் அடங்கிய அறிக்கையை அந்த ஆணையம் விரைவில் வெளியிடும் என்று போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ இஷாம் இஷாக் கூறினார்.

விமான டிக்கெட்டுகளின் விலை 70 விழுக்காட்டிற்கும் மேல் உயர்வு கண்டதாக சிலர் கூறுகின்றனர். எனினும், நாங்கள் அக்கட்டணத்தை குறைத்துள்ளதோடு இன்று காலை முதல் குறைவான கட்டணத்தில் பயண டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

பெருநாள் காலத்தைக் கருத்தில் கொண்டு விமானச் சேவைகளை அதிகரித்ததன் மூலம் இந்த கட்டணக் குறைப்பு சாத்தியமானது என்று அவர் தெரிவித்தார்.

பெருநாள் காலத்தின் போது சபா மற்றும் சரவா ஆகிய மாநிலங்களுக்கான பயணச் சேவைக்கு அதிகப்பட்ச கட்டணங்களை விதிக்க வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் விமான நிறுவனங்களுக்கு அறைகூவல் விடுத்திருந்தார்.


Pengarang :