ECONOMYNATIONALTOURISM

ஹோட்டல்கள், கிராம தங்கும் விடுதிகளில் சுற்றுப் பயணிகள் எண்ணிக்கை அபரிமித உயர்வு

கோலாலம்பூர், மே 5- இவ்வாண்டு நோன்புப் பெருநாள் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் மீண்டும் சந்திப்பற்குரிய ஒரு களமாக மட்டுமின்றி நாட்டிலுள்ள சுற்றுலா மையங்களை சென்று காண்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது.

இவ்வாண்டு நோன்புப் பெருநாளின் போது ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்தே எனப்படும் கிராம தங்கும் விடுதிகளுக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

இதன் மூலம், கடந்த ஈராண்டுகளாக முடங்கிக் கிடந்த நாட்டின் சுற்றுலாத் துறை மற்றும் ஹோட்டல் துறைகள் புத்துயிர்ப் பெறுவதற்கான வாய்ப்பும் கிட்டியுள்ளது.

கோத்தா கினபாலு, கெந்திங் ஹைலண்ட்ஸ் போன்ற இடங்களில் உள்ள தங்கும் விடுதிகளுக்கு வழக்கமான நாட்களைக் காட்டிலும் இந்த பெருநாள் காலத்தில் 100 விழுக்காடு வரை  கிராக்கி ஏற்பட்டுள்ளதாக சிக்கன ஹோட்டல் மற்றும் மலேசிய வர்த்தக சங்கத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஸ்ரீ கணேஷ் மைக்கல் கூறினார்.

நாட்டிலுள்ள பெரிய நகரங்கள் தவிர்த்து, ஜோகூர் மாநிலத்தின் பத்து பகாட், மெர்சிங் போன்ற சிறிய நகரங்களிலும் தங்கும் விடுதிகளுக்கான தேவை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதிகளில் தங்கும் விடுதிகளுக்கான தேவை மே மற்றும் ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம். நாட்டு எண்மிக் எனப்படும் குறுந்தொற்று கட்ட நகர்வில் இருந்த போதிலும் வாடிக்கையாளர்கள் எஸ்.ஒ.பி. எனப்படும் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யும்படி ஹோட்டல் நடத்துநர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறோம் என அவர் சொன்னார்.


Pengarang :