ECONOMYPBTSELANGOR

கம்போங் துங்கு தொகுதியில் “கும்புல் ரைட்“ திட்டம்- 10,000 இலவசப் பயணங்களை வழங்குகிறது

பெட்டாலிங் ஜெயா, மே 9- கம்போங் துங்கு தொகுதி “கும்புல் ரைட்“ எனப்படும் இணைய அழைப்பு வாடகை வேன் சேவையை வரும் புதன்கிழமை முதல் அறிமுகப்படுத்துகிறது.
பள்ளிவாசல்கள், எல்.ஆர்.டி. நிலையம், வழிபாட்டுத் தலங்கள், உணவகங்கள் மற்றும் பள்ளிகளை உள்ளடக்கிய 59 தடங்களில் இந்த வாடகை வேன் சேவை வழங்கப்படுவதாக  அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

இத்திட்டத்தின் வழி செக்சன் 22, ஜாலான் 22/49 99 ஸ்பீட்மார்ட் மினி மார்க்கெட்டுக்குச் செல்வோர் பெரிதும் பயன்பெறுவர். காரணம் ஓட்டுநர் இல்லாத காரணத்தால் இத்தடத்திற்கான சேவையை ரெப்பிட் கே.எல். நிறுவனம் நிறுத்தி விட்டது என்று அவர் சொன்னார்.

வர்த்தக மையங்களுக்குச் செல்லும் வழித்தடங்களில் இச்சேவையை வழங்குவதன் மூலம் பொருளாதாரத்திற்கு உந்து சக்தியை ஏற்படுத்த முடியும் என்பதோடு போக்குவரத்து நெரிசலையும் குறைக்க முடியும் என அவர்  தெரிவித்தார்.

வரும் ஜூலை 11 ஆம் தேதி 10,000 இலவச பயணச் சேவைகளை தாங்கள் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொது மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் இந்த வாடகை வேன் சேவை திட்டம் குறித்து அறிந்து கொள்வதற்கு ஏதுவாக தாங்கள் பயண வழித் தடம் தொடர்பான வரைபடத்தையும் தாங்கள் வெளியிடவுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

ஒரு வெள்ளி கட்டணத்திலான இந்த சேவை தினசரி காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மற்றும் கார் நிறுத்துமிடப் பற்றாக்குறைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதை இத்திட்டம் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.


Pengarang :