ECONOMYSELANGORTOURISM

ஷா ஆலமில் இசை நீரூற்று நிகழ்வு-  நூற்றுக்கணக்கானோர் கண்டு களித்தனர்

ஷா ஆலம், மே 10- நோன்புப் பெருநாளை முன்னிட்டு வார இறுதியில் இங்குள்ள லாமான் புடாயாவில் நடைபெற்ற இசை நீரூற்று நிகழ்வை  நூற்றுக்கணக்கனோர் கண்டு களித்தனர்.

நோன்புப் பெருநாள் விடுமுறை முடிந்து மக்கள் வீடு திரும்பிய பின்னர் இந்நிகழ்வுக்கு வருவோரின் எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவு தலைவர் ஷாரின் அகமது கூறினார்.

கடந்த வாரம் சுமார் 200 பேர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவ்வார இறுதியில் அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

ஜொலிக்கும் வண்ண விளக்கொளியில் இசைக்கேற்ப நீரூற்று நர்த்தனமாடும் இந்த மையம் ஷா ஆலம் மாநகரின் புதிய சுற்றுலாத் தளமாக உருவாக்கம் கண்டுள்ளது.

ஷா ஆலம் தாமான் தாசேக் வருவோர் பொழுதை இனிமையாக கழிப்பதற்கு ஏதுவாக இந்த இசை நீரூற்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஷாரின் மேலும் சொன்னார்.

நோன்புப் பெருநாளை முன்னிட்டு இந்த இசை நீரூற்று கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. இந்நிகழ்வு இம்மாதம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என்று அவர் கூறினார்.

இரவு 9.00 மணி முதல் 9.30 மணி வரையிலும் இரவு 9.45 மணி முதல் இரவு 10.15 மணி வரையிலும் இரு கட்டங்களாக இந்த இசை நீரூற்று நிகழ்வு நடத்தப்படும்.


Pengarang :