ECONOMYPBTSELANGOR

ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடுவதற்காக 33,000 க்கும் மேற்பட்ட ஷாப்பிங் பற்றுச் சீட்டுகளை மாநில அரசு மக்களுக்கு வழங்கியது.

ஷா ஆலம், மே 11: மாநில அரசு 33,400 ஜோம் ஷாப்பிங் ஹரி ராயா பெருநாள் பற்றுச் சீட்டுகளை குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு (பி40) விநியோகித்து உள்ளது.

ஈத் பண்டிகையை கொண்டாடுபவர்கள் சுமையைக் குறைக்க இந்த முயற்சி உதவுகிறது என்று டத்தோ மந்திரி புசார் பேஸ்புக் மூலம் தெரிவித்தார்.

“இந்த ஆண்டு ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு, 33,400 சிலாங்கூர் குடிமக்களுக்கு சிறப்பு பற்றுச் சீட்டுகளை விநியோகிப்பதற்காக சிலாங்கூர் அரசாங்கம் இந்த ஆண்டு RM33.4 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.

“இந்த உதவித் திட்டத்தில் சிலாங்கூரில் உள்ள 56 சட்டமன்ற தொகுதிகளும் பங்கெடுத்துக் கொண்டதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சுங்கை துவா சட்டமன்றத்திலிருந்து மொத்தம் 450 பெறுநர்கள் தலா RM100 மதிப்புள்ள ஜோம் ஷாப்பிங் ஹரி ராயா பெருநாள் பற்றுச் சீட்டுகளை கூட்டாக  பெற்றனர்.

சிலாங்கூர் மாநில பரிவுமிக்க அன்னையர் உதவித் திட்டம் (கிஸ்)மற்றும் மூத்த குடிமக்கள் பரிவுத் திட்டங்களில் (எஸ்.எம்.யு.இ.)பயன்பெறாத பி40 குடும்பங்கள், தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் ஆகியோர் இந்த பற்றுச் சீட்டுகளைப் பெற்றனர்.


Pengarang :