ECONOMYTOURISM

சிலாங்கூர் அரசாங்கம் ரெடாங் மற்றும் தியோமான் தீவுகளை சுத்தம் செய்தல், பாதுகாத்தல் ஆகியவற்றில் உதவ உள்ளது.

ஷா ஆலம், மே 14: மாநில அரசு, திரங்கானுவில் உள்ள ரெடாங் தீவு, தெங்கோல் தீவு மற்றும் பகாங்கில் உள்ள தியோமான் தீவு ஆகிய இடங்களில் ஓஷன் கிளீனாப்‘  திட்டத்தின் மூலம் தூய்மைப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை மேற்கொள்ளும்.

” குப்பைகள் கடலில் சேராமல் இருக்க, ‘ஓஷன் கிளீனாப்‘  உள்ளிட்ட துப்புரவுப் பணிகளை 2016 ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் கடல்வழி நுழைவாயில் (SMG) கீழ், சுங்கை கிள்ளான் பகுதியில் நாங்கள் நிர்வகித்து வருகிறோம்.

“இதுபோன்ற முயற்சிகளில் நாங்கள் ஒன்றாக ஈடுபடுவோம், நாங்கள் பகாங் மற்றும் திரங்கானு அரசாங்கங்களுடன் கூட்டாக தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்ள நல்ல ஆதரவைப் பெற்றுள்ளோம்” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

சிலாங்கூர் மாநில மீன்வளத் துறை, சிலாங்கூர் நீர் மேலாண்மை ஆணையம் (LUAS), Landasan Lumayan Sdn Bhd, Berjaya Corporation Berhad மற்றும் Universiti Kebangsaan Malaysia Marine Ecosystem Research Centre (Ekomar) ஆகியவையும் பின்னர் கூட்டாக இந்தத் திட்டத்தை நடத்தும் என்றார்.

“இந்தத் தீவுகளுக்கு செல்லும் திட்டத்தில் மொத்தம் 30 பேர் ஈடுபடுவார்கள், இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை காட்டுவதில் சிலாங்கூர் அரசாங்கத்தின் முயற்சியாகும்” என்று அவர் கூறினார்.


Pengarang :