ECONOMYHEALTHSELANGOR

நோன்புப் பெருநாளை முன்னிட்டு நோயாளிகள் வீடுகளுக்கு விஜயம்- டுசுன் துவா தொகுதி ஏற்பாடு

ஷா ஆலம், மே 18- நோன்புப் பெருநாளை முன்னிட்டு கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு வருகை புரிந்து ஆறுதல் கூறும் திட்டத்தை டுசுன் துவா சட்டமன்றத் தொகுதி சேவை மையம் தொடக்கியுள்ளது.

கடும் நோயினால் பாதிக்கப்பட்ட பத்து நோயாளிகளை இதுவரை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களை வீடுகளுக்குச் சென்று காணும் பணி வெகு விரைவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எர்டி பைசால் யூசுப் கூறினார்.

இந்த திட்டத்திற்கு பெக்கவானிஸ் எனப்படும் சிலாங்கூர் மகளிர் சமுக நல அமைப்பின் ஒத்துழைப்பு எங்களுக்கு கிடைத்துள்ளது. இந்த வருகையின் போது அவர்கள் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு நிதியுதவி செய்வர் என்று அவர் சொன்னார்.

நோன்புப் பெருநாள் சமயத்தில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளவர்களின் சுமையை ஓரளவு குறைப்பதில் இந்த திட்டம் உதவும் என நம்புகிறோம். இந்த ஷியாவால் மாதத்தின் போது அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் காண விரும்புகிறோம் என்றார் அவர்.

ஜியாரா மெடிக் திட்டத்தின் கீழ் கடும் நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகள் வாங்கும் திட்டத்திற்காக தமது தரப்பு 95,000 வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக பெக்கவானிஸ் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கடந்த மார்ச் மாதம் கூறியிருந்தார்.


Pengarang :