ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

நெகிழிப் பைகளுக்கு எதிரான பிரசார இயக்கத்திற்கு அனைத்து மாநிலங்களும் ஆதரவு

கோலாலம்பூர், மே 18- நெகிழிப் பை (பிளாஸ்டிக்) பயன்பாட்டிற்கு எதிரான பிரசார இயக்கத்திற்கு அனைத்து மாநிலங்களும் ஆதரவளித்துள்ளன. இந்த பிரசார இயக்கத்தை சிலாங்கூர், பினாங்கு, பகாங் ஆகிய மாநிலங்கள் தற்போது அமல்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு நெகிழிப் பைக்கும் 20 காசை மாசுபாடு கட்டணமாக விதிக்க அம்மாநிலங்கள் ஒப்புக் கொண்டதாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

ஊராட்சி மன்றங்களுக்கான 76 வது தேசிய மன்றக் கூட்டத்தில்  நெகிழிப் பை பயன்பாட்டிற்கு  மாசுபாடு கட்டணத்தை விதிக்க இணக்கம் காணப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பயனீட்டாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெகிழிப் பைகளுக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்த இதர மாநிலங்களும் திட்டமிட்டுள்ளன என்றார் அவர்.

மலேசியாவில் நெகிழிப்பைகளால் ஏற்படும் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்கள் கடந்தாண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்ட அனைத்து தரப்பினரும் இத்திட்டத்திற்கு ஆதரவளிப்பர் என நம்புகிறோம் என்றார் அவர்.


Pengarang :