ECONOMYSELANGOR

உலு லங்காட் மாவட்ட நோன்புப் பெருநாள்  பொது உபசரிப்பில் 10,000 பேர் பங்கேற்பு

உலு லங்காட், மே 18-  சிலாங்கூர் மாநில அரசின் உலு லங்காட் மாவட்ட நிலையிலான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில்  சுமார் 10,000 பேர் பங்கு  கொண்டனர்.

பண்டார் பாரு பாங்கி, லாமான் நியாகா கம்யுனிட்டியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தன்  துணைவியார் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமதுவுடன் அவர் வருகை புரிந்தார்.

இந்த பொது உபசரிப்பில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், உலு லஙகாட் மாவட்ட  அதிகாரி டாக்டர் அனி அகமது மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனிடையே, நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரிய அளவில் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பு நடத்தப்படுவது கண்டு தாம் மகிழ்ச்சியடைவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஏ.பெரியசாமி ( வயது 60) கூறினார்.

ஈராண்டுகளுக்குப் பிறகு அதிக மக்கள் கூட்டத்தைக் காண்பது மனதுக்கு இதமாக உள்ளது. ஆகவே, வாய்ப்பை நழுவவிடாமல் இந்த நிகழ்வுக்கு வந்தேன் என்றார் அவர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக பெருநாள் கொண்டாட்டங்கள் நடைபெறாமலிருந்த நிலையில் இவ்வாண்டு மாவட்ட நிலையிலான கொண்டாட்ட நிகழ்வுகளை மாநில அரசு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் வரும் ஆம் 21 ஆம் தேதி நடத்துகிறது.

 


Pengarang :