ECONOMYSELANGOR

இல்திஸாம் சிலாங்கூர் பென்யாயாங் ஜூலையில் தொடங்கும்

உலு லங்காட், 18 மே: ஐ.பி,ஆர் எனப்படும் மக்கள் நலன் முன்னெடுப்பு திட்டத்திற்கு பதிலாக பரிவுமிக்க சிலாங்கூர் அர்ப்பணிப்பு திட்டம் (ஐ.எஸ்.பி) இந்த ஜூலை முதல் செயல்படுத்தப்படும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

புதிய சூத்திரம் முழுமையாக முடிந்ததும் அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“மக்களுக்கு மாநில அரசின் அக்கறையின் புதிய அணுகு முறையை அறிமுகப்படுத்த சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) பதிவு கவுண்டர்கள் திறக்கப்படும்.

நேற்றிரவு பண்டார் பாரு பாங்கி சமூக வர்த்தக தளத்தில் சிலாங்கூர் ஹரி ராயா திறந்த இல்லத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

மக்கள் நலனுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட கரிசனை, அக்கறை மற்றும் மனிதாபிமான உணர்வின் பரந்த சூழலை ஐ.எஸ்.பி எடுத்துக்காட்டுவதாக அமிருடின் கூறினார்.

இந்த ஐ.எஸ்.பி. திட்டத்தின் வழி அதிகமான மக்கள் பயன்பெறுவர். கிஸ் எனப்படும் பரிவுமிக்க அன்னைத் திட்டத்திற்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் (பிங்காஸ்) வழி சுமார் 30,000 பேர் பயன் பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.

பெருங்குடல் புற்றுநோயைக் கண்டறிய ஆண்களுக்கு பரிசோதனையை விரிவுபடுத்துவது உட்பட பொதுமக்களுக்கான சுகாதார முயற்சிகளையும் ஐ.எஸ்.பி திட்டம் மேம்படுத்தி வருகின்றனர்


Pengarang :