ECONOMYHEALTHSELANGOR

சிலாங்கூரில் கை, கால் மற்றும் வாய் நோய் தொற்றுகள் கட்டுப்பாட்டில் உள்ளன

உலு லங்காட், 18 மே: கை, கால் மற்றும் வாய் நோய் (HFMD) நோய் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் பள்ளிகள் அல்லது மழலையர் பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி, இதுவரை தொற்று இன்னும் கட்டுக்குள் இருப்பதாகவும், நோய் காரணமாக பள்ளிகள் எதுவும் மூடப்படவில்லை என்றும் கூறினார்.

முன்னதாக, சுகாதார தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது , கால் மற்றும் வாய் நோய்த்தொற்றுகள் 15 மடங்கு அதிகரித்து 31,661 சம்பவங்களாக பதிவாகியுள்ளன.

சிலாங்கூரில் 8,864 சம்பவங்கள் அல்லது 28 விழுக்காடு, கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா – 4,421 சம்பவங்கள் (14 விழுக்காடு), சபா – 2,650 சம்பவங்கள் (8 விழுக்காடு), பேராக் – 2,638 சம்பவங்கள் (8 விழுக்காடு) மற்றும் கிளந்தான் – 2,493 சம்பவங்கள் (7.9 விழுக்காடு), மற்ற மாநிலங்களில் 1,500க்கும் குறைவான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


Pengarang :