ECONOMYHEALTHSELANGOR

கம்போங் துங்குவில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்- 200 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 18- இம்மாதம் 14 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா, எஸ்.எஸ்.2 பகுதியில் நடத்தப்பட்ட இலவச மருத்துவ முகாமில் கம்போங் துங்குவைச் சேர்ந்த சுமார் 200 குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் பொது மக்கள் குறிப்பாக மூத்த குடிமக்கள் திரளாக கலந்து கொண்டதாக தொகுதி சட்டமன்ற  உறுப்பினர் லிம் யீ வேய் கூறினார்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் இரத்த அழுத்தம், குளுக்கோஸ், கொலஸ்ட்ரோல் அளவு, நாடித் துடிப்பு, கண்,காது,முதுகெலும்பு உள்ளிட்ட பத்து விதமான சோதனைகள் நடத்தப்பட்டதோடு உணவு முறை குறித்த ஆலோசனையும் வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இச்சோதனை நடவடிக்கைகளை பிற்பகல் 1.00 மணிக்குள் முடிப்பதற்கு எங்கள் தொகுதி சேவை மையத்தின் பணியாளர்களும் தன்னார்வலர்களும் கடுமையாகப் பாடுபட்டனர். இச்சோதனைக்காக நிர்ணயிக்கப்பட்ட கோட்டா முடிந்து விட்ட காரணத்தால் பலர் இச்சோதனையில் பங்கு பெற இயலாமல் போனது குறித்து நாங்கள் வருத்தமடைகிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வட்டார மக்களின் நலனுக்காக இது போன்ற நிகழ்வுகளை தாங்கள் அதிகளவில் நடத்தவுள்ளதாக கூறிய அவர், அத்திட்டங்கள் குறித்த தகவல்களை சமூக ஊடகங்கள் வாயிலாக அறிந்து  கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :