ECONOMYPENDIDIKANSELANGOR

கல்வி மேம்பாடு  மாநிலத்தின் பிரதான  நோக்கம்  அது மாநில அரசின் முக்கிய நிகழ்ச்சி நிரல்

ஷா ஆலம், ஜூன் 29: சிலாங்கூர் அரசாங்கம், பள்ளிகளின் கல்வி  மேம்பாட்டு திட்டங்களுக்கு  எப்பொழுதும் கை கொடுப்பது, அடுத்த தலை முறையினரைச்  சிறந்தவர்களாக்கப் பள்ளியே தகுந்த மையம், கல்வியே சிறந்த மார்க்கம்  என்றார் தனது பேஸ்புக் பதிவில்.

நாட்டின்  தலைவிதியை  நிர்ணயிப்பவர்கள்  அடுத்த தலைமுறையினர் என்று நம்புவதால், பள்ளிகளின் மீது தீவிரக் கவனம் செலுத்தப்படுகிறது என்று டத்தோ மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

“கல்வி சிலாங்கூர் அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலும்கூட,   இது மத்திய அரசின் பொறுப்பில் இருந்தாலும், கல்விச் செயல்முறை சீராக நடைபெற, பள்ளிகளுக்கு இயன்றவரை உதவ நாங்கள் எப்போதும் பாடுபடுகிறோம்.

“சமீபத்தில், மாநில அரசு உலு லங்காட் மாவட்டத்தில் உள்ள 77 பள்ளிகளுக்கு அவர்களின் திட்டங்களைத் தொடங்க RM20.4 லட்சம் ஒதுக்கியது,” என்று அவர் இன்று பேஸ்புக்கில் தெரிவித்தார்.

கல்வியின் தாக்கத்தையும் மதிப்பையும் அடைய பள்ளி மற்றும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் சங்கத்தின் (PIBG) விண்ணப்பத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“இந்த முயற்சி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களுக்கு நன்மைகளைத் தரும் என்று நம்புகிறோம்” என்று அமிருடின் கூறினார்.

ஜூன் 19 அன்று, உலு லங்காட்டில் உள்ள பள்ளிகளுக்கான பங்களிப்பு கல்வி நிறுவனங்களை வலுப்படுத்த உதவுவதில் அரசின் அர்ப்பணிப்புக்கு சான்றாகும் என்று டத்தோ மந்திரி புசார் கூறினார்.

மக்களின் மதப் பள்ளிகள், தேசியப் பள்ளிகள் மற்றும் தேசிய இடைநிலை பள்ளிகளுக்கு உதவி விநியோகிக்கப்படுகிறது.


Pengarang :