ECONOMYMEDIA STATEMENT

மனைவி, மாமியாரை கத்தியால் குத்தியதை லோரி ஓட்டுநர் ஒப்புக் கொண்டார்

பாசீர் மாஸ், ஜூன் 29- மனைவி மற்றும் மாமியாரை கத்தியால் குத்தி காயம் விளைவித்ததாக சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுகளை லோரி ஓட்டுநர் ஒருவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார்.

கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி மாலை 5.39 மணியளவில் தும்பாட், கம்போங் சபாங்கிலுள்ள வீடொன்றில் தன் மனைவி நிக் சல்மா (வயது 26) மற்றும் மாமியார் துவான் அஜிசா துவான் பொங்சு (வயது 61) ஆகியோருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாக வான் முகமது ஹபிசுடின் வான் இஸ்மாயில் (வயது 27) என்பவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தண்டனைச் சட்டத்தின் 324 வது பிரிவின் கீழ் அவருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. அதே சட்டத்தின் 326ஏ மற்றும் 326 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டு சேர்த்து வாசிக்கப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்தாண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி வழங்கப்படும்.

குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு 20 ஆண்டு வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி வழங்க  தண்டனைச் சட்டத்தின் 324வது பிரிவு வகை செய்கிறது.

குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தண்டனை விதிப்பதை வரும் செப்டம்பர் 5 ஆம் தேதிக்கு நீதிபதி முஸ்தாகிம் சுகார்னோ ஒத்தி வைத்தார்.


Pengarang :