ECONOMYNATIONAL

ஜூலை 1 முதல் கோழிக் இறைச்சியின் உச்சவரம்பு விலை ஒரு கிலோ ரிங்கிட் 9.40 ஆக  நிர்ணயம்

ஷா ஆலம், ஜூன் 29: தீபகற்ப மலேசியாவில் நடுத்தர கோழியின் புதிய உச்சவரம்பு விலையை ஒரு கிலோவுக்கு RM9.40 என அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

வேளாண் அமைச்சரின் கூற்றுப்படி, கோழி முட்டையின் உச்சவரம்பு விலை கிரேடு ஏ ஒரு முட்டை 0.45 சென், கிரேடு பி (0.43 சென்/ ஒரு முட்டை) மற்றும் கிரேடு சி (0.41 சென்/ ஒரு முட்டை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“நடுத்தர கோழி மற்றும் முட்டைகளுக்கான உச்சவரம்பு விலை நிர்ணயம் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது” என்று டத்தோஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அரசாங்கம் சமீபத்தில் அறிவித்த சிறப்பு உதவியுடன் இந்த முடிவு ஒருங்கிணைக்கப் பட்டது, இது 86 லட்சம் குறைந்த மற்றும் நடுத்தர வருமான குடும்பங்களுக்கு பயனளிக்கும் என்று அவர் கூறினார்.

பொருட்களின் விலைகள் உயரும் பிரச்சினை நாட்டில் மட்டும் ஏற்படவில்லை, இது புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் கால நிலை மாற்றம் மற்றும் உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவின் காரணமாக ஏற்படுகிறது.

முன்னதாக, டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏற்படும் சுமையைக் குறைக்க ஜூலை 1 முதல் கோழிப் பண்ணையாளர்களுக்கு மானியம் வழங்கப்பட மாட்டாது என அறிவித்திருந்தார்.


Pengarang :