ECONOMYSELANGOR

சிலாங்கூர் இந்திய வர்த்தகர்களின்  மேம்பாட்டிற்கு மாநில அரசு தொடர்ந்து உதவும்!    மந்திரி புசார்.

ஷா ஆலம், ஜூன் 30 –  இந்திய தொழில் முனைவர்களுக்கு மாநில அரசின் உதவிகளை  ஐ-சீட்,  ஹிஜ்ரா வர்த்தக கடன்,  ஹிஜ்ரா பொருள் உதவி திட்டங்கள் மற்றும் நகராட்சி மன்றங்கள் வழியும் வழங்கி வருகிறது.

மாநில அரசு, இந்தியர்கள் பொருளாதார மேம்பாட்டுக்கு, சரியான திட்டங்களை கொண்டுள்ள எந்த குழுவுக்கும் அதன் ஆதரவையும், ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கும் என மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை வர்த்தக சபை தலைவர் நிவாஸ் ராகவன் தலைமையில் அதன் துணைத் தலைவர் வி.கே.கே ராஜசேகரன், உதவித் தலைவர் கமால் கம்டார், செயலாளர் டோனி கிளேய்போர்ட்,  உதவித் செயலாளர் மோகனா சின்னத்தம்பி, பொருளாளர் டத்தின் மகேஸ்வரி ராமசாமி ஆகியோருடன் குழுவின் ஆலோசகர் திரு, ராமன் நலன்சாமியும் சிலாங்கூர் மந்திரி புசாரை சந்தித்தபோது, மேற்கண்ட உத்தரவாதம் வழங்கப் பட்டதாக தெரிகிறது.

கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில்துறை வர்த்தக சங்கம் 94  ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது, கடந்த நான்கு ஆண்டுகளாக வர்த்தக உருமாற்று  பெரும் திட்டத்தை வகுத்து செயல் படுத்தி வருவதாகவும், மாநில அரசின் ஆதரவும் ஒத்துழைப்பும் வர்த்தக சபையின் இலக்கை எட்ட பெரும் உதவியாக இருக்கும் என மந்திரி புசாரிடம் தெரிவிக்கப்பட்டது.

சிலாங்கூர் இந்திய வர்த்தகர்களின் மேம்பாட்டிற்கு கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழில் துறையின் வர்த்தக சபை எடுத்துவரும் முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் மாநில அரசு தொடர்ந்து  ஆதரவு அளிக்கும் என மந்திரி புசார் கூறினார்.


Pengarang :