ECONOMYNATIONAL

மெக்சிஸ் தொலைத் தொடர்பு சேவையில் இடையூறு- பயனீட்டாளர்கள் புகார்

ஷா ஆலம், ஜூன் 30- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெக்சிஸ் சேவையில் இன்று இடையூறு ஏற்பட்டது. இதனால் அந்நிறுவனத்தின் பயனீட்டாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தொழில்நுட்பப் பிரச்னை காரணமாக தங்கள் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண தாங்கள் முயன்று வருவதாகவும் அந்த தொலைத் தொடர்பு நிறுவனம் கூறியது.

சேவையில் இடையூறு ஏற்பட்டதற்கான காரணத்தையும் அதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகிறோம் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளதாக பெரித்தா ஹரியான் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது
மெக்சிஸ் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தை பல பயனீட்டாளர்கள் தொடர்பு கொண்டு  இணைய தரவு தொடர்பான சேவையில் ஏற்பட்ட இடையூறு குறித்து விளக்கம் கோரி வருகின்றனர்.


Pengarang :