ECONOMYHEALTHPBTSELANGOR

ஹாஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு மலிவு விற்பனை- தஞ்சோங் சிப்பாட்டில் 7ஆம் தேதி நடைபெறும் 

ஷா ஆலம், ஜூலை 1– ஹாஜ்ஜிப் பெருநாளை முன்னிட்டு வரும் ஜூலை 7 ஆம் தேதி தஞ்சோங் சிப்பாட், டத்தாரான் பத்து லாவுட்டில் மக்கள் பரிவு விற்பனை இயக்கம் நடைபெறவுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் 1,000 கோழிகள் விற்பனைக்கு வைக்கப்படும் என்று தஞ்சோங் சிப்பாட் சட்டமன்ற உறுப்பினர் பொர்ஹான் அமான் ஷா கூறினார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஒத்துழைப்புடன் இந்த மலிவு விற்பனை நடைபெறுவதாக அவர் சொன்னார்.

பெருநாளுக்குத் தேவையான பொருள்களை பொதுமக்கள் வாங்குவதை எளிதாக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மலிவு விற்பனையில் கோழி தவிர்த்து முட்டை, காய்கறிகள் மற்றும் இதர சமையல் பொருள்களும் கிடைக்கும் என்று அவர் சொன்னார்.

கோழி கிலோ 12,00 வெள்ளி விலையில் விற்கப்படுகிறது. எனினும், மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் சட்டமன்றத் தொகுதி மூலம் கோழிக்கான விலையில் 2.00 வெள்ளியை உதவித் தொகையாக வழங்குகிறோம் என்றார் அவர்.

மேலும் ஒரு தட்டு முட்டை மானிய விலையில் 8.00 வெள்ளிக்கு விற்கப்படுகிறது. பயனீட்டாளர்களின் செலவினத்தைக் குறைப்பதற்காக எல்லா பொருள்களும் இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம் என்று அவர் சொன்னார்.

இந்த மலிவு விற்பனை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் எனக் கூறிய அவர், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் முகப்பிடங்கள் திறக்கப்படும் என்றார்.


Pengarang :