ECONOMYSELANGOR

ஹிஜ்ரா பண்டிகைக் காலத்தில் பழ வர்த்தகர்களை அழைக்கிறது

ஷா ஆலம், ஆகஸ்ட் 6: பண்டிகைக் காலத்தில்  கூடுதல் மூலதனம் தேவைப்படும் பழ வியாபாரிகள் ஐ-பெர்மூசிம் திட்டத்தின் கீழ் RM1,000 முதல் RM20,000 வரை கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

பேஸ்புக்கில் ஒரு விளக்கப்படம் மூலம், யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் இந்த திட்டத்தின் நிதியுதவி காலத்தை ஆறு மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு விழுக்காடு லாப விகிதத்துடன் வழங்க  உள்ளது மற்றும் கடன் வாங்குபவர்கள் வாராந்திர அடிப்படையில் தவணைகளை செலுத்த வேண்டும்.

ஐ-பெர்மூசிம்  விண்ணப்பிப்பதற்கான தகுதித் தேவைகள் கீழ்வருமாறு:

ஐ-பெர்மூசிம் நிதியுதவிக்கான விண்ணப்பங்களை http://mikrokredit.selangor.gov.my/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை www.hijrahselangor.com அல்லது அருகிலுள்ள 20 ஹிஜ்ரா கிளைகளைத் தொடர்பு கொண்டு பெறலாம்.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், ஐ-பெர்மூசிம் ஐத் தவிர மொத்தம் 4,113 தொழில்முனைவோர் ஹிஜ்ராவிலிருந்து 6.901 கோடி வணிக நிதியுதவியை ஐ-பிஸ்னஸ், ஜீரோ டு ஹீரோ, நியாகா டாருள் ஏசான் (நாடி), கோ டிஜிட்டல், ஐ-லெஸ்தாரி மற்றும் ஐ-அக்ரோ உள்ளிட்ட ஏழு நிதித் திட்டங்கள் மூலம் பெற்றுள்ளனர்.


Pengarang :